விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

வங்கிகளின் இணையசேவைகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்?

Posted in கணிப்பொறி by கணேஷ் on திசெம்பர் 9, 2007

பயன்படுத்துகிறோமோ இல்லையோ, கடனட்டைகள் வைத்துக் கொள்வது நம்மில் பலருக்கு ஒரு கௌரவமாகத் தோன்றுகிறது. அதுபோலவே இணைய வங்கிச் சேவை (NetBanking) பெற்றுக் கொள்பவர்களும் இப்போது அதிகரித்துவிட்டனர்.

ஆறாம் தேதி ஜிமெயில் மின்னஞ்சலைப் பார்த்த எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஆக்ஸிஸ் வங்கியிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருப்பதாக தெரிந்த்து. உங்கள் வங்கிக் கணக்குகளை நாங்கள் சரிபார்க்கவேண்டும் எனவே பின் வரும் இணையசுட்டியைத் தட்டி உங்கள் கணக்கைத் திறந்து உள் செல்லுங்கள் என்று வந்திருந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்று கேட்கிறீர்கள் தானே…. ஆக்ஸிஸ் வங்கியில் எனக்கு கணகே இல்லை. ஆம்… சரி என்னதான் என்று பார்ப்போம் என்று பார்த்தால் என் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் (Version 7) அது சந்தேகத்துக்குறிய இணையதளம் என்பதை புத்திசாலித்தனமாகக் காட்டிக்கொடுத்தது.

ஆனால் பதிப்பு 6 ஐஈ இதைக் காட்டவில்லை. அப்படியே ஆக்ஸிஸ் வங்கியின் தளம் போலவே உருவாக்கப்பட்டிருந்தது. இதைப் பற்றி நணபர்களுக்கு ஒரு பல்முனை மின்னஞ்சல் அடித்துவிட்டேன். ஒரு நணபர் திரும்ப பதில் எழுதியிருந்தார். தெரியாமல் போய் அதில் கடவுச்சொல்லை அடித்ததும் அவர் கணக்கில் இருந்து இருபதாயிரத்துக்கும் மேல் பணம் களவாடப்பட்டிருந்தது. நொந்து போன மனிதர் வங்கியில் புகார் அளித்ததும் எடுத்தவனைப் பிடித்துவிட்டார்கள்…. தப்பித்தார்.

அந்த வங்கியின் Spoofing முகவரிக்கு எனக்கு வந்த அஞ்சலை அனுப்பிவைதேன்…. அந்த வங்கியிலிருந்து அதன் அதிகாரி நன்றி சொல்லி அனுப்பியிருந்தார். பின் அந்த இணையதளம் முடக்கப்பட்டது என்றும் அறிந்துகொண்டேன்.

கவனமாக இருந்தால் இத்தகைய ஸ்பூஃபிங்(Spoofing) மோசடிகளிலிருந்து தப்பிக்க முடியும்.

அதற்கு வழிகள்

  1. 1. மின்னஞ்சல் முகவரி மூலம் வரும் வங்கிகளின் இணைய சுட்டிகளைச் சொடுக்காதீர்கள்
  2. இணைப்பின் மேல் உங்கள் சுட்டியைக் கொண்டு சென்றாலே உங்கள் நிலைச்சட்டத்தில் (status bar) அது வேறு ஏதாவது ஒரு இணையதளத்து முகவரியைக் காட்டும்.
  3. எப்போதும் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளம் சென்றே உங்கள் உள்ளீடுகளைத்தரவும்.
  4. இப்படி ஒரு மின்னஞ்சல் உங்களுக்கு வந்தால் அதை சம்பந்தப்பட்ட வங்கியின் இணையதளத்திலிருந்து (Spoofing) மின்னஞ்சல் முகவரியைப் பெற்று அதற்கு இதன் நகலை அனுப்பிவையுங்கள்.
  5. அது உங்களுக்கு சம்பந்தமில்லாத வங்கியாயிருந்தாலும் சரி அனுப்புங்கள். பிறரைக்காக்க இது உதவும்.

நன்றிகள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: