விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

புற்று நோய் வளர்கிறது!

Posted in பொது அறிவியல், மருத்துவம் by கணேஷ் on மார்ச் 19, 2008

புகைப்பதனால், மது அருந்துவதனால் மற்றும் சூரிய ஒளியில் அதிகநேரம் நேரடியாக இருப்பதால் புற்றுநோய் உண்டாகிறது. இது பெற்றோர் வழியாக குழந்தைகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் புற்றுநோயால் இறந்ததாக 2007ம் ஆண்டு அறியப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் அதிகமாகிக்கொண்டுள்ளது. இருந்தாலும் அதன்மூலம் இறப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன்மூலம் புற்றுநோயுடன் வாழ்பவரின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. என்பதை அறியலாம். இது விஞ்ஞான வளர்ச்சியின் விளைவு என்றாலும் மனிதனின் வாழ்க்கையில் உணவு மற்றும் வேறு வகையான் பழக்கங்களின் மாற்றங்களினாலும் இருக்கலாம்.

நீங்கள் அரிப்பினால் அவதிப்படுகிறவரா இதோ ஒரு நல்ல செய்தி!

டெர்மாசில்க் என்ற துணிவகைகளின் சிறப்புத்தன்மைகளை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் உடலில் அரிப்பைக் குறைக்க முடியும் என்று தெரிகிறது. ஒரு கணக்கெடுப்பில் 23 விழுக்காடு மக்கள் உடல் அரிப்பினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிகிறது! அதில் 66 விழுக்காட்டினர் உடலின் வெப்பநிலை மாறுபாட்டால் பாதிக்கப் படுவதும் தெரியவந்துள்ளது. இந்தப்பிரச்சனைகளையெல்லாம் போக்க இந்த புதுவகைத்துணிகள் உதவியாக இருக்கும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகைத் துணிகள் இரவுநேர உடைகள் தயாரிக்கப் பெரிதும் விரும்ப்பப்படும் என்று தெரிகிறது. உடல் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் இந்தவகைத் துணிகளால் நாம் இனி நிம்மதியாய் உறங்க முடியும் என நம்பலாம்.

-”தி ஹிந்து” நாளேட்டிலிருந்து

Tagged with: , ,

அஜினோமோட்டோ ஆபத்து!

Posted in பொது அறிவியல், மருத்துவம் by கணேஷ் on ஜனவரி 22, 2008


மோனோசோடியம் குளுடாமேட் தெரியுமா உங்களுக்கு? தெரியாது என்று சொல்பவர்கள் யாராயினும் அஜினோமோட்டோ என்றால் உடனே தெரிந்து கொள்வார்கள். சுவை கூட்டும் தூள் என்று விளம்பரம் செய்யப்படும் அஜினமோட்டோவின் வேதியல் பெயர்தான் அது! உணவில் கலக்கப்படும் விஷம் என்றுகூடச் சொல்லலாம். MSG என்றும் சொல்லப்படுகிறது. ஒரு துளி கலந்தால் சுவை கூடும் ஆனால் வயிறு என்னவாகும் தெரியுமா? அல்சர், கேன்ஸர் போன்ற வியாதிகள் நம் வயிற்றையும் உடம்பையும் பாதிக்கும். இன்று நம்மால் தவிர்க்கமுடியாத ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் கண்டிப்பாக இந்த வியாதிகள் அஜினமோட்டோ உருவில் விற்கப்படுகின்றன. உயர்ந்த ரக உணவகங்களில் இது கலக்கப்படுவதில்லை! ஆனால் மலிவு விலைக்கடைகளில் சுவைகூட்டி மக்களைக் கவர உணவில் கலக்கப்படுகிறது. பொதுவாக சைனீஸ் உணவு வகைளான நூடுல்ஸ், சில்லி ட்ரை உணவு வகைகள் அனைத்திலும் இந்த விஷம் கலக்கப்படுகிறது. எனவே அவற்றைத் தவிர்த்தல் உடலுக்கு ஆரோக்கியத்துக்கு முக்கியம்.

செயற்கை இதயம் வேலைசெய்தது!

Posted in கண்டுபிடிப்புகள், மருத்துவம் by கணேஷ் on ஜனவரி 14, 2008

டைம்ஸ் ஆன்லைன் செய்திகளிலிருந்து: விஞ்ஞானிகள் துடிக்கும் செயற்கை இதயத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர். இதன்மூலம் விரைவில் செயற்கை இதயம் உருவாக்கப்படலாம் என்று தெரிகிறது! பார்க்கப்போனால் செத்தவனைக் கூட உயிர்ப்பித்துத் தந்துவிடுவார்கள் இந்த விஞ்ஞானிகள். ஒருபுறம் இந்தமாதிரியான ஆய்வுகள் ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் இவைகளின் முடிவை நினைக்கப் பயமாயிருக்கத்தான் செய்கிறது! விரைவில் மனிதனுக்கு மறுசுழற்சி (Recycling) நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

பாஸ்பரஸ் பூனைகள்!

இரவில் ஒளிரும் பூனைகள்குளோனிங் பல சர்ச்சைகளுக்குள்ளான ஒரு விஞ்ஞானத்தின் மைல்கல் என்பதை யாவரும் அறிவர். ஆனாலும் குளோனிங் மூலமாக பல வியாதிகளை உருவாக்கும் உயிரணுக்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடிகிறது.

தென் கொரிய விஞ்ஞானிகள் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து இரவில் ஒளிரும் (பாஸ்பரஸ் போன்று) புரோட்டீன்களை வைத்து பூனைகளை உருவாக்கியிருக்கிறார்கள். என்ன கொடுமைடா சாமி என்கிற ரீதியாய் இருக்கிறதல்லவா? தென்கொரிய தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகத்தின் முதல் மாற்றிஅமைக்கப்பட்ட ஒளிஉமிழ் புரோட்டீன் உயிரணுக்களை வைத்து உருவாக்கப்பட்ட விலங்கினம் இந்தப் பூனைகள் என கூறப்பட்டுள்ளது.