விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

செவ்வாய்க்குச் சனிபிடிக்குமா?

Posted in சுற்றுச்சூழல், பொது அறிவியல் by கணேஷ் on டிசம்பர் 23, 2007

2008 ஜனவரி மாதத்தின் இறுதியில் செவ்வாய்க் கிரகத்தை ஒரு எரிகல் தாக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் வானவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

அது கடந்த 1908ல் சைபீரியாவைத் தாக்கிய அளவே இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. சைபீரியாவைத்தாக்கிய கல் மூன்று மெகா டன் வெடிமருந்துகளை ஒன்றாக வெடிக்கச் செய்த பாதிப்பை உண்டாக்கியிருந்தது. பத்து மில்லியன் மரங்களை அது கபளீகரம் செய்தது.

எப்படியோ, வியாழனுக்கும் இப்படி ஒரு விளைவு நிகழ்ந்த போது அது தாங்கிக்கொண்டது. செவ்வாய்க் கிரகத்தைவிட அது அளவில் மிகப்பெரியது. ஆனால் இதுபோன்ற விளைவைச் செவ்வாய் எப்படித் தாங்கிக் கொள்ளப்போகிறது என்றுதான் தெரியவில்லை.

செவ்வாய்க்கிரகத்துக்கு எப்படியோ சனி பிடிக்கப்போகிறது என்று தெரிகிறது.

உலகம் உருகுகிறது!

Posted in சுற்றுச்சூழல் by கணேஷ் on டிசம்பர் 14, 2007

கரித்துகள்களின் அளவு சுற்றுப்புறசூழலில் அதிகரித்து வருவது குறித்து அறிவியலாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். ஏற்கனவே (மேலும்…)