தமிழர்களின் நாகரீகம்!
நாகப்பட்டினத்து அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கல்வெட்டுக்களில் இருந்த எழுத்துருவங்கள் சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துருக்களை ஒத்திருப்பதை சமீபத்தில் உணர்ந்திருக்கிறார்கள். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. ஐராவதம் மகாதேவன் செம்பியன்கண்டியூர், மேலப்பெரும்பள்ளம் ஆகிய கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சிந்து சமவெளிநாகரீகத்தின் எழுத்துவடிவங்களைக் கொண்டிருப்பதை உறுதிசெய்துள்ளார். இவை இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதற்குமுன் பள்ளி ஆசிரியர் திரு சண்முகநாதன் ஒரு கற்கால கோடாரியைக் கண்டெடுத்தார். அந்தக் கோடாரியில் சிந்து சமவெளி நாகரீகத்தை ஒத்திருக்கும் எழுத்துவடிவங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாடு சிந்து சமவெளி நாகரீகத்தைத் தொடர்ந்து வந்திருப்பதை உறுதி செய்துள்ளனர்.
மேலும் கோவையிலுள்ள சூலூரில் கண்டெடுக்கப்பட்ட பழம்பெரும் கற்கால அச்சுவட்டுக்கள் தற்போது பாகிஸ்தானில் இருக்கும் ஹரப்பா நாகரீகத்தைச் சார்ந்ததாக உறுதிசெய்யப்பட்டது. தற்போது அது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பொருட்காட்சியிலுள்ளது. இதன்மூலம் தமிழ் மொழியின் வரலாற்றுச்சிறப்பு சாட்சிகளுடன் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழர்கள் அப்பொழுதே கடல்கடந்தும், பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்தும் தங்கள் பரிமாற்றங்களை வைத்துள்ளது உறுதிசெய்யப்படுகிறது.
மேலும் தெரிந்துகொள்ள : படிக்க ஹிந்து நாளிதழ்
காகிதத்தில் கப்பல் செய்து….

ஜப்பானிய அறிவியலாளர்கள் முற்றிலும் காகிதத்தால் ஆன விமானத்தை உருவாக்கியுள்ளார்கள். ஜப்பானின் வானவியலாளர் யசுயுகி மியாசகி ‘இந்த முயற்சி முழுமையாக வெற்றி பெற்றுள்ளதாகவும், இதன்மூலம் முற்றிலும் காகித்தால் ஆன விண்கலன்களை உருவாக்கி பயணித்து திரும்ப வரும்போது காற்றில் விண்கலனின் உராய்வு மற்றும் அதனால் உண்டாகும் வெப்பம் ஆகியவற்றைக் குறைத்து தரையிறங்குவதை எளிதாக்க முடியும்’ என்று கூறியுள்ளாராம்.
(என்ன கொடுமைங்க இது… காகித்தத்தில் நாமெல்லாம் சின்ன வயசுல செஞ்ச குட்டி விமானங்களை இவர்கள் காப்பி அடிச்சுட்டாங்களோ?)
ஜப்பானிய வான்வெளி ஆராய்ச்சிக்கழகம் இதை ஏற்றுக்கொண்டு வருடத்துக்கு மூன்று இலட்சம் டாலர்களை இதற்கான தொடர் ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்போவதாக அறிவித்துள்ளது.
முழு கட்டுரையும் ஆங்கிலத்தில் படிக்க… இங்கே சொடுக்கவும்
2500 ஆண்டுகள் பழமையான நகரம்!
ஒரிசாவில் புவனேசுவரில் 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒரு நகரம் கண்டறியப்பட்டுள்ளது. உலகில் இதுவரை பெரிய நாகரீகமாகக் கருதப்பட்ட ஏதென்ஸ் நகரத்தைவிட இது பெரியதாக இருக்கும் என்று தொல்வியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்!
ஒரிசாவின் பழமையான நாகரீகத்துக்குக்கு இது ஒரு சான்றாகக் கருதப்படுகிறது. மேலும் வரலாற்றின் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த நகர வாழ்க்கைக்குச் சான்றாக தொல்பொருட்களும் தடயங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன!
அசைபடத்தில் பார்க்க: http://specials.rediff.com/news/2008/feb/15video2.htm
நீங்கள் அரிப்பினால் அவதிப்படுகிறவரா இதோ ஒரு நல்ல செய்தி!

டெர்மாசில்க் என்ற துணிவகைகளின் சிறப்புத்தன்மைகளை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் உடலில் அரிப்பைக் குறைக்க முடியும் என்று தெரிகிறது. ஒரு கணக்கெடுப்பில் 23 விழுக்காடு மக்கள் உடல் அரிப்பினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிகிறது! அதில் 66 விழுக்காட்டினர் உடலின் வெப்பநிலை மாறுபாட்டால் பாதிக்கப் படுவதும் தெரியவந்துள்ளது. இந்தப்பிரச்சனைகளையெல்லாம் போக்க இந்த புதுவகைத்துணிகள் உதவியாக இருக்கும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகைத் துணிகள் இரவுநேர உடைகள் தயாரிக்கப் பெரிதும் விரும்ப்பப்படும் என்று தெரிகிறது. உடல் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் இந்தவகைத் துணிகளால் நாம் இனி நிம்மதியாய் உறங்க முடியும் என நம்பலாம்.
-”தி ஹிந்து” நாளேட்டிலிருந்து
செயற்கை இதயம் வேலைசெய்தது!
டைம்ஸ் ஆன்லைன் செய்திகளிலிருந்து: விஞ்ஞானிகள் துடிக்கும் செயற்கை இதயத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர். இதன்மூலம் விரைவில் செயற்கை இதயம் உருவாக்கப்படலாம் என்று தெரிகிறது! பார்க்கப்போனால் செத்தவனைக் கூட உயிர்ப்பித்துத் தந்துவிடுவார்கள் இந்த விஞ்ஞானிகள். ஒருபுறம் இந்தமாதிரியான ஆய்வுகள் ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் இவைகளின் முடிவை நினைக்கப் பயமாயிருக்கத்தான் செய்கிறது! விரைவில் மனிதனுக்கு மறுசுழற்சி (Recycling) நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
உருளைக்கிழங்கு இணைய சர்வர்
உருளைக் கிழங்கிலிருந்து மின்சாரம்தயாரித்து அதில் ஒரு உள்ளமைக்கப்பட்ட (Embedded) இணைய சர்வரைச் செயல்படுத்தியிருக்கிறார்கள். PIC16F876 எனும் நுண் சில்லை (Microchip)க் கொண்டு 76.8 கிலோ ஹெட்ஸில், 1.5 வோல்ட் மின்சாரத்தில் இயங்கக் கூடிய (0.00002 வாட்கள்) இணைய சர்வர் இது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்திலும் தன் நிலையை மறுபதிப்பு (Refresh) செய்யக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் உருளைக் கிழங்கு மின்கலன்களை எப்போதெல்லாம் மாற்றவேண்டும் என்றும் கணித்திருக்கிறார்கள்…
பாஸ்பரஸ் பூனைகள்!
குளோனிங் பல சர்ச்சைகளுக்குள்ளான ஒரு விஞ்ஞானத்தின் மைல்கல் என்பதை யாவரும் அறிவர். ஆனாலும் குளோனிங் மூலமாக பல வியாதிகளை உருவாக்கும் உயிரணுக்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடிகிறது.
தென் கொரிய விஞ்ஞானிகள் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து இரவில் ஒளிரும் (பாஸ்பரஸ் போன்று) புரோட்டீன்களை வைத்து பூனைகளை உருவாக்கியிருக்கிறார்கள். என்ன கொடுமைடா சாமி என்கிற ரீதியாய் இருக்கிறதல்லவா? தென்கொரிய தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகத்தின் முதல் மாற்றிஅமைக்கப்பட்ட ஒளிஉமிழ் புரோட்டீன் உயிரணுக்களை வைத்து உருவாக்கப்பட்ட விலங்கினம் இந்தப் பூனைகள் என கூறப்பட்டுள்ளது.
ஒரு மறுமொழியிடுக