விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

முந்துகிறது மைக்ரோசாஃப்ட்!

Posted in கணிப்பொறி, பொது அறிவியல் by கணேஷ் on ஏப்ரல் 23, 2008

கொஞ்சம் கொஞ்சமாக கூகுளை எல்லாவிதத்திலும் முந்துகிறது மைக்ரோசாஃப்ட். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் இதுதான் உண்மை! லைவ் மெயில் வெளியானதும் மைக்ரோசாஃப்டின் இணைய ஆதிக்கம் மேலும் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம். மிகவிரைவில் 4 மற்றும் 5 வது இடங்களிலிருந்து 2ம் இடத்துக்கு முன்னேற எல்லா நிலையிலும் தகுதி பெற்றுவிட்டது மைக்ரோசாஃப்ட்.

தற்சமயம் வந்த தகவலின்படி லைவ் சேர்ச் (http://search.live.com) புதுப்பிக்கப் பட்டு விட்டதால் கூகுளைவிட பல மடங்கு வேகமாகச் செயல்படுகிறது என்று தெரிகிறது.

கூகுளில் பணியாற்றிவந்த முக்கிய பெருந்தலைகள் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறி வேறு நிறுவனங்களை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்.

எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!

முப்பரிமாண புவிவரைபடக்களஞ்சியம்!

Posted in கணிப்பொறி, பொது அறிவியல் by கணேஷ் on ஏப்ரல் 10, 2008

எர்த்மைன் படமாக்கும் வாகனம்

கூகுள் புவிவரைபடங்களைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. மிகப்பெரிய கலைக்களஞ்சியத் தளங்கள், புவியியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் ஆகியவை புவிவரைபடங்களைத் தனியாக உருவாக்க முடியாமல்/உருவாக்காமல் கூகுளின் வரைபடத்தைத் தான் பயன்படுத்திக் கொள்கின்றன. இவற்றில் முக்கியமானதாகக் கூறப்படுவது விக்கிமேப்பியா (www.wikimapia.org) என்ற கட்டற்ற(Open Source) கலைக்களஞ்சியம் ஆகும். அந்தளவுக்கு கூகுளின் வரைபடங்கள் பிரபலம். மேலும் முப்பரிமாண வீதி வரைபடங்களையும் வெளியிட்டு மிகப் பிரபலமாகத் திகழ்ந்து வருகிறது கூகுள்.

2006ம் ஆண்டு உருவாக்கப்பட்டு தற்போது டெக்-கிரஞ்ச் விருது பெற்றுள்ள ஒரு நிறுவனம் பற்றி உங்களுக்கு அதிகமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வீதிகள் உள்ளிட்ட முப்பரிமாண உண்மை வரைபடங்களை மனிதர்கள் வீதிகளில் நடந்தால் பார்க்கும் கோணத்திலேயே உருவாக்கும் நோக்கத்தில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அடுக்கு அடுக்காக அசைபடக் கருவிகளைக் கொண்டு வாகனங்களை முக்கிய வீதிகளில் வலம்வர வைத்து அதன் மூலம் நேரடிக் காட்சிகளைப் படமாக்கி அவற்றில் தேவையான செய்திகளை ஏற்றி, பார்ப்பவர்களுக்கு தாமே அவ்விடங்களுக்குச் சென்று வலம்வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தி அவர்கள் திரும்பும் வீதிகளைக் காட்டி ஆச்சரியத்தில் மூழ்கடிக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த ஏற்பாட்டை உண்மையைக் கிரமப்படுத்துதல்(Indexing reality) என்று அழைக்கிறார்கள் இவர்கள்.வாகனத்தின் பக்கத்தோற்றம்

தற்போது சோதனைக்காக இந்த ஒருங்கிணைப்பு வெற்றிகரமாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சமே துல்லியமான அளவீடுகள் மற்றும் பயனரின் தேவைக்கேற்ற மாற்றங்களை உள்ளடக்கிக் கொள்ளும் தன்மை என கூறப்படுகிறது. கட்டடக் கட்டமைப்பு, நகர வசதி மேம்பாடு, சுகாதாரம், ஆயுட்காப்பீடு, அவசர சேவைகள், போக்குவரத்து, சுற்றுலா மற்றும் பலதுறைகளில் சாதனை படைக்க இருக்கும் இந்த மாதிரியான பயன்பாட்டு தொழில்நுட்பத்தை நாம் இனிவரும் காலங்களில் தவிர்க்க இயலாது என்பது அப்பட்டமான உண்மை.

www.earthmine.com என்ற தளத்தில் சென்று இதுபற்றி முழுமையாகக் காணுங்கள்.

யாஹூவை விலைபேசியாச்சு!

Posted in கணிப்பொறி, பொது அறிவியல் by கணேஷ் on பெப்ரவரி 2, 2008

Yahoo-Microsoft

இணைய வல்லவனாக ஒருகாலத்தில் முதன்மையானவனாகத் திகழ்ந்த யாஹூ வை மென்பொருள் வல்லவன் மைக்ரோசாஃப்ட் விலை பேசியுள்ளது! அதன் விலையில் ஒன்பது மடங்கு அதிகமாகத் தந்து (44.6 பில்லியன் டாலர்) அந்த நிறுவனத்தை வாங்கிக்கொள்ள அறிவிப்பு செய்துள்ளது. அதற்கான காரணமும் உண்டு. யாஹுவையும் எம்.எஸ்.என்.ஐயும் இணைப்பதன் மூலமும் கூகுளையும் மிஞ்சிவிடலாம் என்ற கணக்கில் மைக்ரோசாஃப்ட் யோசிக்கிறது. மைக்ரோசாஃப்ட்டின் 2009க்கான முன்னோட்ட வருமானத்தின் 21 மடங்கை கூகுள் இப்போதே சம்பாதித்துக் கொண்டுள்ளது. யாஹூ மற்றும் எம்.எஸ்.என். இணைப்பு மூலம் 23 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டமுடியும் அதனால் இந்த அதிகவிலை பரவாயில்லை என்று சொல்கிறது மைக்ரோசாஃப்ட். கொஞ்சம் அதிகம்தான். ஏன் என்றால் மின்னஞ்சல் சேவை தவிர சொல்லிக்கொள்ள அதில் ஒன்றுமில்லை! அதுவும் யாஹூவின் மின்னஞ்சல் சேவை வர வர மாமியாள் கதைதான் இதற்குப்போய் இவ்வளவு காசா என்று யோசித்தால் அதில் மிஞ்சுவது காலகாலமாய் இருக்கும் யாஹூவின் வாடிக்கையாளர்கள்தான் மதிப்பு மிகுந்தவர்கள் என்பது விளங்கும். வேறென்ன இதில் சொல்ல!

Tagged with: ,

விக்கியின் அதிரடி ஆரம்பம்!

Posted in கணிப்பொறி, பொது அறிவியல் by கணேஷ் on ஜனவரி 14, 2008

விக்கிப்பிடியாவுக்குப் போட்டியாய் கூகுள் களமிறங்கி கட்டற்ற கலைக்களஞ்சியம் ஏற்படுத்தப்போவதாய் ஒரு கருத்தை நம் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வலைப்பதிவில் படித்திருப்பீர்கள். அதற்குள் அடுத்தகட்ட நடவடிக்கையில் விக்கிபீடியா களமிறங்கிவிட்டது! ஆமாம், தேடல்தள (Search Engine) உலகில் சகலகலா வல்லவனாய் விளங்கும் கூகுளைக் கவிழ்க்க விக்கி தேடல் தளத்தை உருவாக்கியுள்ளது! 1998 முதல் கூகுள்தான் இந்த தேடல்தள உலகை தனி ஆளாய் ஆண்டுவந்தது. கூகுள் இயங்குவது Page Ranking எனப்படும் பக்கத் தரத்தின் அடிப்படையில்தான். மற்றபடி கூகுள் அல்லது MSN இரண்டுமே தங்கள் தளங்களில் இயங்கும் இயக்கமுறை (Algorithm) ரகசியத்தை வெளியிடுவதில்லை! விக்கி தேடல் தளம் எந்தளவுக்கு வெற்றிபெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

உருளைக்கிழங்கு இணைய சர்வர்

Posted in கணிப்பொறி, கண்டுபிடிப்புகள் by கணேஷ் on டிசம்பர் 20, 2007

உருளைக் கிழங்கிலிருந்து மின்சாரம்தயாரித்து அதில் ஒரு உள்ளமைக்கப்பட்ட (Embedded) இணைய சர்வரைச் செயல்படுத்தியிருக்கிறார்கள். PIC16F876 எனும் நுண் சில்லை (Microchip)க் கொண்டு 76.8 கிலோ ஹெட்ஸில், 1.5 வோல்ட் மின்சாரத்தில் இயங்கக் கூடிய (0.00002 வாட்கள்) இணைய சர்வர் இது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்திலும் தன் நிலையை மறுபதிப்பு (Refresh) செய்யக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
உருளைக்கிழங்கு இணைய சர்வர்
இதில் உருளைக் கிழங்கு மின்கலன்களை எப்போதெல்லாம் மாற்றவேண்டும் என்றும் கணித்திருக்கிறார்கள்…

விக்கிபிடியாவுக்கு போட்டியாய் கூகுள் களமிறங்குகிறது!

Posted in கணிப்பொறி, பொது அறிவியல் by கணேஷ் on டிசம்பர் 15, 2007

விக்கிபீடியா தெரியாதவர்கள் இருக்க முடியாது! கட்டற்ற கலைக்களஞ்சியமாக திகழ்ந்து கொண்டிருக்கும் பன்மொழித் தளம் அது. பல கோடிக்கணக்கில் கருத்துக்களை குவித்து வைத்துள்ள அந்தத் தளத்தில் யார்வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்பதை அனைவரும் அறிவர். அதற்கு போட்டியாய் இன்னொரு தளம் வந்துகொண்டிருக்கிறது தெரியுமா? (மேலும்…)

ஒபேராவின் மைக்ரோசாப்டுக்கு எதிரான வழக்கு

Posted in கணிப்பொறி by கணேஷ் on டிசம்பர் 13, 2007

ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்ற கதையாக ஒன்று நடந்திருக்கிறது நம் மென்பொருள்ச் சந்தையில்

ஒபேரா பிரவுசர் தெரியுமா? மைக்ரோசாப்ட் ஒப்பந்தப்படி தன் ஒத்துழைப்பை தரவில்லை என்ற குற்றச்சாட்டை முதன் முதலாய் ஐரோப்பியக் கமிஷனில் பதிவு செய்திருக்கிறது. மேலும் (மேலும்…)

கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்!

Posted in கணிப்பொறி by கணேஷ் on டிசம்பர் 11, 2007

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆகட்டும் ஃபைர்ஃபாக்ஸ் ஆகட்டும் உங்கள் கடவுச்சொல்லை (Password) சேமிக்கட்டுமா? என்று கேட்டால் வேண்டவே வேண்டாம் என்று கொடுத்துவிடுங்கள். நம்மில் பலருக்கு ஒரு துள்ளுபெட்டி (Popup Dialogbox) வந்தாலே அது என்னவென்று பார்க்காமல் சரி என்று கொடுப்பதே பழக்கமாக இருக்கும். உதாரணத்துக்கு நீங்கள் அறிவில்லாதவரா  என்று கேட்டால் கூட (மேலும்…)

மோனோ என்பது என்ன?

Posted in கணிப்பொறி by கணேஷ் on டிசம்பர் 9, 2007

நீங்கள் டாட்நெட் (.Net) கணினி மென்பொருள் வல்லுனராக இருந்தால் நீங்கள் எழுதும் மென்பொருள் இனி விண்டோஸ் இயக்கத்தில் மட்டும்தான் இயங்கும் என்ற கவலை வேண்டாம். வந்தேவிட்டது மோனோ…மோனோ என்றால் என்ன?  (மேலும்…)

வங்கிகளின் இணையசேவைகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்?

Posted in கணிப்பொறி by கணேஷ் on டிசம்பர் 9, 2007

பயன்படுத்துகிறோமோ இல்லையோ, கடனட்டைகள் வைத்துக் கொள்வது நம்மில் பலருக்கு ஒரு கௌரவமாகத் தோன்றுகிறது. அதுபோலவே இணைய வங்கிச் சேவை (NetBanking) பெற்றுக் கொள்பவர்களும் இப்போது அதிகரித்துவிட்டனர். (மேலும்…)