விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

ஏப்ரல் 4, 2008

கம்பிவடம் இல்லாத உலகம்!

கோப்பு வகை: 1 — கணேஷ் @ 5:41 மு.பகல்
Tags: , ,

விரைவில் கம்பிவடம் இல்லாத உலகத்தைப் பார்க்கப்போகிறோம். ஆமாம், இண்டெல் நிறுவனம் வை-ஃபை (Wi-Fi) தொழில்நுட்பத்தில் இயங்கும் நகரங்களைத்தாண்டி அதன் இணைப்பை கிராமங்கள் தோறும் நீட்டிப்பு செய்யும் வகையில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு கிராம இணைப்பு இயங்குதளம் (Rural Connectivity Platform) எனப்பெயரிடப்பட்டுள்ளது.

இதன் இயக்கமுறைப்படி, முதல் தொடர்புநீட்சி (Antenna) நகரத்தில் இயங்கும் வலையமைப்போடு இணைக்கப்படும். பின்னர் அடுத்தடுத்த தொடர்புநீட்சிகள் 60 மைல் தூரத்திற்கொருமுறை வைக்கப்பட்டு தொடர்பு நீட்டிக்கப்படும். புவியின் குவித்தன்மையின் காரணமாக அதற்குமேல் நீட்டிக்கமுடியாது.

இன்டெலின் ஆரம்பகால சோதனையில் வெற்றிகரமாக 30 மைல் தூரத்துக்கு எந்தவிதமான இடையூறுகளுமின்றி தகவல் பரிமாற்றம் நடத்தப்பட்டது. சாதாரண வை-ஃபை தொடர்புநீட்சிகளே இதில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதன் வீரியத்தை அதிகரிக்க சிறப்பு வானலை மென்பொருட்கள் உதவி செய்தன.

இரு முனை கட்டமைப்பை ஏற்படுத்த வெறும் ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மட்டுமே செலவாகுமென்று இண்டெல் தெரிவிக்கிறது. இந்த சோதனை இந்தியா, பனாமா, வியட்நாம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் செய்யப்பட்டது. வியாபார ரீதியாக இந்த செயல்பாடு 2008ம் ஆண்டின் மத்தியில் வரவிருக்கிறது…

No Comments Yet »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.