ஈரானை வேவு பார்க்கிறது இஸ்ரேல்!
ஈரானின் அணுஆயுதத்தயாரிப்பின் மேல் இஸ்ரேலுக்கு ஒரு பயம் உண்டாகியிருப்பதாகத் தெரிகிறது. எனவே இஸ்ரேல் இந்தியாவின் துணையுடன் ஒற்றறியும் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது. அது இனி இரவு பகல் பாராமல் ஈரானைக் கண்காணிக்கும் என்று அந்த நாட்டின் பாதுகாப்பகம் தெரிவித்துள்ளது. அந்த செயற்கைக்கோளில் அதிநவீன ராடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் TECSAR எனப்படும் இந்த செயற்கைக்கோள் உலகில் மிக அதிநவீன விண்வெளித் தொழில்நுட்பத்தில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இது தயாரிக்கப்படுவதற்கும் ஏவப்படுவதற்கும் மொத்தம் பத்து மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகியிருப்பதாக விண்வெளி ஆய்வுமையம் தெரிவித்துள்ளது!
அஜினோமோட்டோ ஆபத்து!

மோனோசோடியம் குளுடாமேட் தெரியுமா உங்களுக்கு? தெரியாது என்று சொல்பவர்கள் யாராயினும் அஜினோமோட்டோ என்றால் உடனே தெரிந்து கொள்வார்கள். சுவை கூட்டும் தூள் என்று விளம்பரம் செய்யப்படும் அஜினமோட்டோவின் வேதியல் பெயர்தான் அது! உணவில் கலக்கப்படும் விஷம் என்றுகூடச் சொல்லலாம். MSG என்றும் சொல்லப்படுகிறது. ஒரு துளி கலந்தால் சுவை கூடும் ஆனால் வயிறு என்னவாகும் தெரியுமா? அல்சர், கேன்ஸர் போன்ற வியாதிகள் நம் வயிற்றையும் உடம்பையும் பாதிக்கும். இன்று நம்மால் தவிர்க்கமுடியாத ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் கண்டிப்பாக இந்த வியாதிகள் அஜினமோட்டோ உருவில் விற்கப்படுகின்றன. உயர்ந்த ரக உணவகங்களில் இது கலக்கப்படுவதில்லை! ஆனால் மலிவு விலைக்கடைகளில் சுவைகூட்டி மக்களைக் கவர உணவில் கலக்கப்படுகிறது. பொதுவாக சைனீஸ் உணவு வகைளான நூடுல்ஸ், சில்லி ட்ரை உணவு வகைகள் அனைத்திலும் இந்த விஷம் கலக்கப்படுகிறது. எனவே அவற்றைத் தவிர்த்தல் உடலுக்கு ஆரோக்கியத்துக்கு முக்கியம்.
செயற்கை இதயம் வேலைசெய்தது!
டைம்ஸ் ஆன்லைன் செய்திகளிலிருந்து: விஞ்ஞானிகள் துடிக்கும் செயற்கை இதயத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர். இதன்மூலம் விரைவில் செயற்கை இதயம் உருவாக்கப்படலாம் என்று தெரிகிறது! பார்க்கப்போனால் செத்தவனைக் கூட உயிர்ப்பித்துத் தந்துவிடுவார்கள் இந்த விஞ்ஞானிகள். ஒருபுறம் இந்தமாதிரியான ஆய்வுகள் ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் இவைகளின் முடிவை நினைக்கப் பயமாயிருக்கத்தான் செய்கிறது! விரைவில் மனிதனுக்கு மறுசுழற்சி (Recycling) நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
விக்கியின் அதிரடி ஆரம்பம்!
விக்கிப்பிடியாவுக்குப் போட்டியாய் கூகுள் களமிறங்கி கட்டற்ற கலைக்களஞ்சியம் ஏற்படுத்தப்போவதாய் ஒரு கருத்தை நம் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வலைப்பதிவில் படித்திருப்பீர்கள். அதற்குள் அடுத்தகட்ட நடவடிக்கையில் விக்கிபீடியா களமிறங்கிவிட்டது! ஆமாம், தேடல்தள (Search Engine) உலகில் சகலகலா வல்லவனாய் விளங்கும் கூகுளைக் கவிழ்க்க விக்கி தேடல் தளத்தை உருவாக்கியுள்ளது! 1998 முதல் கூகுள்தான் இந்த தேடல்தள உலகை தனி ஆளாய் ஆண்டுவந்தது. கூகுள் இயங்குவது Page Ranking எனப்படும் பக்கத் தரத்தின் அடிப்படையில்தான். மற்றபடி கூகுள் அல்லது MSN இரண்டுமே தங்கள் தளங்களில் இயங்கும் இயக்கமுறை (Algorithm) ரகசியத்தை வெளியிடுவதில்லை! விக்கி தேடல் தளம் எந்தளவுக்கு வெற்றிபெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
எதுக்குப் படிக்கிறோம்னு தெரியுமா?

இளம் வயதினரின் நூலக நாட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது! அதுவும் பதினெட்டு வயது முதல் 30 வயது வரை இந்த நாட்டம் அதிகமாக இருந்து பின் படிப்படியாகக் குறைந்து விடுகிறதென்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது! இதற்குக் காரணம் வேலைக்கு தேர்வாகும் நோக்கத்துடனும், தங்களின் கல்வி சம்பந்தமான சிறுதிட்டங்களுக்கும் முழுமையாக அவர்கள் நூல்நிலையங்களை நாடுவதாகத் தெரிகிறது. மேலும் இணைய சேவைகளுக்காகவும் நூலங்களுக்குச் செல்கிறவர்களும் பாதிக்குமேல் உண்டு.
உண்மையிலேயே உலக அறிவை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் எத்தனை பேர் நூலகம் செல்வார்கள் என்றும் ஒரு முடிவுக்கு நம்மால் வரமுடிகிறதா…?
ஒரு மறுமொழியிடுக