விக்கிபீடியா தெரியாதவர்கள் இருக்க முடியாது! கட்டற்ற கலைக்களஞ்சியமாக திகழ்ந்து கொண்டிருக்கும் பன்மொழித் தளம் அது. பல கோடிக்கணக்கில் கருத்துக்களை குவித்து வைத்துள்ள அந்தத் தளத்தில் யார்வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்பதை அனைவரும் அறிவர். அதற்கு போட்டியாய் இன்னொரு தளம் வந்துகொண்டிருக்கிறது தெரியுமா? இணையத்தில் தனக்கென்று ஒரு தனிப்பங்கை அமைத்துக்கொண்டுள்ள கூகுள் தான் இந்த மாற்றுத் தளத்தை விரைவில் நிறுவவிருக்கிறது.
அதற்கு ‘நோல்’ ( Knol ) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் நாலெட்ஜ் (knowledge) என்பதன் சுருக்கம்தான் இது. இதில் என்ன தலைப்பில் வேண்டுமானாலும் பக்கங்களை உருவாக்கலாம். படிப்பவர்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள இந்த தளத்தில் விக்கிபீடியா போல் யார்வேண்டுமானாலும் மாற்றலாம் என்ற வசதியைக் குறைத்து யார் பக்கங்களை உருவாக்குகிறார்களோ அவர்கள் மட்டுமே மாற்றும் வசதியைக் கொண்டிருக்கும்.
ஆனால் மாற்றம் கோரி யார்வேண்டுமானாலும் எழுதலாம். இருந்தபோதும் விக்கிபீடியா போல் கட்டற்ற மூலமாய் (Open Source) இது இருந்து முழுக்க முழுக்க இலவசமாகக் கிடைப்பதற்காக அல்லாமல் பக்கங்களை எழுதுபவர் தன் பக்கங்களில் கூகுளின் விளம்பரங்களை வைத்து காசுபார்க்கலாம் என்றும் தெரிகிறது. எது எப்படியோ இருவரும் அடித்துக்கொண்டு நல்லவிதத்தில் சேவைபுரிந்தால் சரி!