நீங்கள் டாட்நெட் (.Net) கணினி மென்பொருள் வல்லுனராக இருந்தால் நீங்கள் எழுதும் மென்பொருள் இனி விண்டோஸ் இயக்கத்தில் மட்டும்தான் இயங்கும் என்ற கவலை வேண்டாம். வந்தேவிட்டது மோனோ…மோனோ என்றால் என்ன?
ஆம்! மேனோ தரும் மென்பொருட்தொகுப்பு லினக்ஸ், மேக் ஓ.எஸ் எக்ஸ். விண்டோஸ் மற்றும் யுனிக்ஸ் இயக்கங்களில் இயங்கும் மென்பொருட்களைத் தயாரிக்க உதவுகிறது. நோவல் (novell) முன்னின்று இறங்கியுள்ள இந்த கட்டற்ற மூலத் (Open Source) திட்டத்தில் பங்களிப்பதற்காக பல குழுமங்கள் செயலில் இறங்கியுள்ளது.
இந்த மோனோ மென்பொருள் கட்டமைப்பில் வெற்றிகரமாக பல மென்பொருட்கள் தயாராகிவிட்டன. முக்கியமாக ஆப்பிளின் சிறந்த வடிவமைப்பிற்கான விருது பெற்றுள்ள கணினி 3D விளையாட்டு உருவாக்கக் கட்டமைப்பு குறிப்பிடவேண்டிய ஒன்று.
மோனோவின் வெற்றிக்கதைகள் மேலும் தொடர்கின்றன.
மேலும் மோனோவைப் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்