மிகப்பெரிய உயிரளவீட்டுத் (Biometric) தகவல்தளம் தயாராகிறது!

அமெரிக்கப் புலனாய்வுத்துறை (FBI) மிகப்பெரிய அளவில் உயிரளவீட்டுத் (Biometric) தகவல்ளைத் தயாரிக்க முயற்சி எடுத்து செயலிலும் இறங்கியிருக்கிறது. அது ஒரு தனிப்பட்ட மனிதனின் வெவ்வேறு பண்புகளையும் விலாவாரியாகக் கொண்டிருக்கும் எனத்தெரிகிறது. உலகளாவிய இந்தத் தகவல் சேகரிப்பு பல நாடுகளின் சட்ட ஒழுங்கு அமைப்புக்களுக்கு உதவும் எனத்தெரிகிறது.
ஒவ்வொருவரின் முக மின்னணுப் பதிப்புக்கள், கைரேகைகள், முகத் அமைப்பு, முகத்திலுள்ள கீறல்கள், கண்ணின் கருவிழி பதிவுகள், அவர்கள் எப்படி நடக்கிறார்கள் மேலும் அவர்களின் இயல்பான செயல்பாடுகள் முதலான தகவல்கள் அதில் இடம்பெறும். இதை வைத்து பெருகிவரும் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் ஆகியோரை உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து கட்டுக்குள் கொண்டுவரலாம் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன! மேலும் பல சூடான செய்திகளைப் படிக்க இங்கே செல்லுங்கள்: வாஷிங்டன் போஸ்ட்
செவ்வாய்க்குச் சனிபிடிக்குமா?
2008 ஜனவரி மாதத்தின் இறுதியில் செவ்வாய்க் கிரகத்தை ஒரு எரிகல் தாக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் வானவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
அது கடந்த 1908ல் சைபீரியாவைத் தாக்கிய அளவே இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. சைபீரியாவைத்தாக்கிய கல் மூன்று மெகா டன் வெடிமருந்துகளை ஒன்றாக வெடிக்கச் செய்த பாதிப்பை உண்டாக்கியிருந்தது. பத்து மில்லியன் மரங்களை அது கபளீகரம் செய்தது.
எப்படியோ, வியாழனுக்கும் இப்படி ஒரு விளைவு நிகழ்ந்த போது அது தாங்கிக்கொண்டது. செவ்வாய்க் கிரகத்தைவிட அது அளவில் மிகப்பெரியது. ஆனால் இதுபோன்ற விளைவைச் செவ்வாய் எப்படித் தாங்கிக் கொள்ளப்போகிறது என்றுதான் தெரியவில்லை.
செவ்வாய்க்கிரகத்துக்கு எப்படியோ சனி பிடிக்கப்போகிறது என்று தெரிகிறது.
உருளைக்கிழங்கு இணைய சர்வர்
உருளைக் கிழங்கிலிருந்து மின்சாரம்தயாரித்து அதில் ஒரு உள்ளமைக்கப்பட்ட (Embedded) இணைய சர்வரைச் செயல்படுத்தியிருக்கிறார்கள். PIC16F876 எனும் நுண் சில்லை (Microchip)க் கொண்டு 76.8 கிலோ ஹெட்ஸில், 1.5 வோல்ட் மின்சாரத்தில் இயங்கக் கூடிய (0.00002 வாட்கள்) இணைய சர்வர் இது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்திலும் தன் நிலையை மறுபதிப்பு (Refresh) செய்யக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் உருளைக் கிழங்கு மின்கலன்களை எப்போதெல்லாம் மாற்றவேண்டும் என்றும் கணித்திருக்கிறார்கள்…
சூதாட்ட விளம்பரங்களினால் வந்த தலைவலி!
இணையத்தில் முப்பெரும் வல்லவர்களான மைக்ரோசாப்ட், யாஹூ மற்றும் கூகுள் ஆகியோர் சூதாட்டங்களுக்கு விளம்பரம் செய்ததற்கான தவறை ஒப்புக்கொண்டு கூட்டாக முப்பத்து ஒன்றரை மில்லியன் டாலர்கள் வழங்குவதாக அறிவித்துள்ளன. ஒருவருடத்திற்கு முன்பே அப்படிப்பட்ட விளம்பரங்களைத் தடைசெய்துவிட்ட போதும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்த தண்டனைத் தொகையை கடந்த டிசம்பர் 19ம் தேதி புதன் கிழமை முடிவுசெய்யப்பட்டது. என்னதான் விளம்பரங்களைத் தடைசெய்தாலும் ஸ்பேம்கள் மூலமாக பலர் கவரப்பட்டு சூதாட்டக்களங்களுக்கு அழைக்கப் படுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை! இதையெப்படித் தடுக்கப் போகின்றன இந்த நிறுவனங்கள்? முடியாத ஒன்றை நினைத்து என்னபயன் என்கிறீர்களா? அதுவும் உண்மைதான்…
பாஸ்பரஸ் பூனைகள்!
குளோனிங் பல சர்ச்சைகளுக்குள்ளான ஒரு விஞ்ஞானத்தின் மைல்கல் என்பதை யாவரும் அறிவர். ஆனாலும் குளோனிங் மூலமாக பல வியாதிகளை உருவாக்கும் உயிரணுக்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடிகிறது.
தென் கொரிய விஞ்ஞானிகள் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து இரவில் ஒளிரும் (பாஸ்பரஸ் போன்று) புரோட்டீன்களை வைத்து பூனைகளை உருவாக்கியிருக்கிறார்கள். என்ன கொடுமைடா சாமி என்கிற ரீதியாய் இருக்கிறதல்லவா? தென்கொரிய தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகத்தின் முதல் மாற்றிஅமைக்கப்பட்ட ஒளிஉமிழ் புரோட்டீன் உயிரணுக்களை வைத்து உருவாக்கப்பட்ட விலங்கினம் இந்தப் பூனைகள் என கூறப்பட்டுள்ளது.
விக்கிபிடியாவுக்கு போட்டியாய் கூகுள் களமிறங்குகிறது!
விக்கிபீடியா தெரியாதவர்கள் இருக்க முடியாது! கட்டற்ற கலைக்களஞ்சியமாக திகழ்ந்து கொண்டிருக்கும் பன்மொழித் தளம் அது. பல கோடிக்கணக்கில் கருத்துக்களை குவித்து வைத்துள்ள அந்தத் தளத்தில் யார்வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்பதை அனைவரும் அறிவர். அதற்கு போட்டியாய் இன்னொரு தளம் வந்துகொண்டிருக்கிறது தெரியுமா? (மேலும்…)
உலகம் உருகுகிறது!
கரித்துகள்களின் அளவு சுற்றுப்புறசூழலில் அதிகரித்து வருவது குறித்து அறிவியலாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். ஏற்கனவே (மேலும்…)
ஒபேராவின் மைக்ரோசாப்டுக்கு எதிரான வழக்கு
ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்ற கதையாக ஒன்று நடந்திருக்கிறது நம் மென்பொருள்ச் சந்தையில்
ஒபேரா பிரவுசர் தெரியுமா? மைக்ரோசாப்ட் ஒப்பந்தப்படி தன் ஒத்துழைப்பை தரவில்லை என்ற குற்றச்சாட்டை முதன் முதலாய் ஐரோப்பியக் கமிஷனில் பதிவு செய்திருக்கிறது. மேலும் (மேலும்…)
கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்!
இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆகட்டும் ஃபைர்ஃபாக்ஸ் ஆகட்டும் உங்கள் கடவுச்சொல்லை (Password) சேமிக்கட்டுமா? என்று கேட்டால் வேண்டவே வேண்டாம் என்று கொடுத்துவிடுங்கள். நம்மில் பலருக்கு ஒரு துள்ளுபெட்டி (Popup Dialogbox) வந்தாலே அது என்னவென்று பார்க்காமல் சரி என்று கொடுப்பதே பழக்கமாக இருக்கும். உதாரணத்துக்கு நீங்கள் அறிவில்லாதவரா என்று கேட்டால் கூட (மேலும்…)
மோனோ என்பது என்ன?
நீங்கள் டாட்நெட் (.Net) கணினி மென்பொருள் வல்லுனராக இருந்தால் நீங்கள் எழுதும் மென்பொருள் இனி விண்டோஸ் இயக்கத்தில் மட்டும்தான் இயங்கும் என்ற கவலை வேண்டாம். வந்தேவிட்டது மோனோ…மோனோ என்றால் என்ன? (மேலும்…)
ஒரு மறுமொழியிடுக